சூரிச் விமான நிலையத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில், விமான பயணத்தினால் காற்று மாசுபடுவதாகக் கூறி தரையில் படுத்துக்கொண்டவாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

Flugstreik எனும் வலைத்தளம், 2020ஆம் ஆண்டுக்குள் மக்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது.

விமானப் பயணத்தினால் காற்று மாசுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், சூரிச் நகர விமான நிலையத்தில் நேற்றைய தினம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுமார் 70 பேர், விமான பயணத்தின் எதிர்மறையான தாக்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

தரையில் படுத்தவாறு போராட்டம் நடத்திய அவர்கள், பின்னர் Flyers-களை விநியோகிக்கும் ஷாப்பிங் பகுதியில் நடந்து சென்றனர். இந்த போராட்டம் குறித்து முன்பே விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காததாலும், கோடை விடுமுறையின் தொடக்கத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாலும், பாதிப்பும் எதுவும் இல்லை என விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததுடன், அமைதியாகவும் நடந்தது. சூரிச் விமான நிலையம் கோடை விடுமுறையின் தொடக்கத்தின் காரணமாக, ஒரு லட்சம் பயணிகள் நகர்ந்ததால் நேற்று கூட்டமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers