மனிதனின் நிலவுப் பயணத்தில் சுவிட்சர்லாந்தின் பங்கும் இருக்கிறது தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நிலவில் மனிதன் கால் வைத்ததன் 50ஆவது ஆண்டை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் அமெரிக்கா என்ன செய்தது என்பதுதான் உலகுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதில் சுவிட்சர்லாந்தின் பங்கும் இருப்பது பலருக்கும் தெரியாது.

அமெரிக்கா அதைக் கொண்டாடும் அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அப்படி என்ன செய்தது சுவிட்சர்லாந்து?

நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் கால் வைத்ததும், ஆல்ட்ரின் தங்கள் நாட்டுக் கொடியை நிலவில் நடுவதற்கு முன் வேறொரு விடயத்தை அங்கு நட்டது பலருக்கும் தெரியாது.

அது 30 சென்றிமீற்றர் அகலமும், 140 சென்றிமீற்றர் நீளமும் கொண்ட ஒரு அலுமினியத் தகடு.

அந்த தகட்டை உருவாக்கியது, சுவிட்சர்லாந்தின் பெர்னிலுள்ள சில அறிவியலாளர்கள். ஆல்ட்ரின் அந்த தகடு பொருத்தப்பட்டிருந்த கம்பியை நட, 77 நிமிடங்களுக்குப் பிறகு நீல் ஆர்ம்ஸ்ட்ராங், அந்த தகட்டை மட்டும் சுருட்டி எடுத்துக் கொண்டார், அந்த கம்பி அங்கேயே விடப்பட்டது.

அந்த அலுமினிய தகட்டிற்கு என்ன முக்கியத்துவம் தெரியுமா?

அது ஒரு சாதாரண தகடல்ல, பல முறை ஆய்வுகட்குட்படுத்தப்பட்டு விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தகடு அது.

சூரியனிலிருந்து, நொடிக்கு பல நூறு கிலோமீற்றர்கள் வேகத்தில் (ஒளியை விட குறைவான வேகத்தில்) பயணிக்கும் சூரிய காற்றின் துகள்கள், இந்த அலுமினிய தகட்டில் வந்து மோதி அதிலேயே பதிந்து விடும்.

பின்னர் அந்த தகட்டை ஆய்வகத்தில் உருக்கி ஒவ்வொரு வகைத் துகளிலும் எவ்வளவு சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட முடியும்.

இந்த கண்டுபிடிப்பும் சாதாரணமானதல்ல, பெரு வெடிப்புக் கோட்பாடு என்னும் Big Bang கோட்பாட்டில் நிலவி வந்த ஒரு பெரும் குழப்பத்தை இந்த ஆய்வு தெளிவாக்கியது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவேதான் அமெரிக்கர்களுடன் சுவிட்சர்லாந்தின் அறிவியலாளர்களும் மனிதன் நிலவில் கால் வைத்ததன் 50ஆவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்