சுவிட்சர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட கொடூர குற்றவாளி: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொடூர குற்றவாளியை கைது செய்த பிரான்ஸ் அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு கைமாறியுள்ளனர்.

தற்போது 35 வயதாகும் கொசோவோ நாட்டவரான பாஷ்கிம் என்ற நபர் சுவிஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த நிலையில்,

கடந்த ஜூலை 8 ஆம் திகதி பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சுவிஸ் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் அதிகாரிகள் கைமாறியுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் விசாரணை கைதியாக சிறையில் இருந்துவந்த பாஷ்கிம், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மண்டல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாஷ்கிம் கடந்த 2013 மே மாதம் 36 வயது இத்தாலியர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதானவராவார்.

சம்பவத்தன்று அந்த இத்தாலியர் தமது குடும்பத்தாருடன் காரில் வந்த நிலையில், அவர் மீது பாஷ்கிம் உள்ளிட்ட இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் அந்த இத்தாலியர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷ்கிம், சிறையில் இருந்து தப்பி கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers