சுவிட்சர்லாந்திலும் ஹாங்காங்கிலும் பிடிபட்ட 21 சூட்கேஸ்கள்: உள்ளே இருந்தது?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
288Shares

மாபெரும் போதைக் கடத்தல் ஒன்று நடைபெறுவதாக சந்தேகம் ஏற்பட்டதின்பேரில், உலகம் முழுவதிலும் நடத்தப்பட்ட சோதனையில், சுவிட்சர்லாந்திலும் ஹாங்காங்கிலும் போதைப்பொருள் அடங்கிய 21 சூட்கேஸ்கள் சிக்கின.

குரோவேஷிய பொலிசார் தலைமையில், 14 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆபரேஷனில் இறங்கினர்.

இந்த ஆபரேஷனின் விளைவாக சுமார் ஒரு டன் அளவுக்கு கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் சிக்கியதுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பான்மையோர் செக் குடியரசு, குரோவேஷியா மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என பேஸல் அரசு வழக்கறிஞரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடந்தவை உருகுவே நாட்டிலிருந்து புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, பிரான்சில் தரையிறங்கியபின் சுவிட்சர்லாந்தின் பேஸல் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது.

அந்த விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சூட்கேஸ்களில், 603 கிலோகிராம் கொக்கைனும், இரண்டு மில்லியன் யூரோ கரன்சியும், ஒரு மில்லியன் மதிப்புள்ள ஆடம்பர பொருட்களும் சிக்கியுள்ளன.

அதைத் தொடர்ந்து குரோவேஷியா, செக் குடியரசு மற்றும் Montenegro நாட்டைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விமான வழி கடத்தலில், இதுதான் போதைப்பொருள் அதிக அளவில் சிக்கிய சம்பவமாக இருக்கலாம் என கருதப்படுவதாக பேஸல் அரசு வழக்கறிஞரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்