இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள சுவிட்சர்லாந்து ஹொட்டல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலுள்ள ஹொட்டல் ஒன்றில் இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை பிரபல இந்திய தொழிலதிபர் ஒருவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொழிலதிபரான Harsh Goenka சுவிட்சர்லாந்தின் Gstaadஇலுள்ள Arc-en-ciel என்னும் ஹொட்டலில் இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பு ஒன்றை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த அறிவிப்பு அந்த ஹொட்டலின் மேலாளரான Christian Matti என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளே, ஹொட்டல் Arc-en-cielக்கு உங்களை வரவேற்கிறோம் என்று கூறும் அந்த அறிவிப்பு, உங்கள் விடுமுறையை நீங்கள் மகிழ்ச்சியாக என்ஜாய் செய்வதற்காக நீங்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி சில விதிமுறைகளைக் கொடுத்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் காலை சிற்றுண்டி சாப்பிடும் இடத்திலிருந்து எதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

அத்துடன், பால்கனியில் சத்தமாக பேசாமல் ஒரு அமைதியாக இருக்கவேண்டும். ஏனென்றால் உங்களைத்தவிர, உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள சுற்றுலாப்பயணிகளும் இங்கிருக்கிறார்கள், அவர்களும் அமைதியை விரும்புகிறார்கள் என்பது போன்ற விடயங்கள் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஐரோப்பாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை விட ஆசியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் எரிச்சலடைந்துள்ள அரசியல்வாதிகள், ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளுக்கு உதவித்தொகை அளிக்கும்

நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், அதிக அளவில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களை இந்த ஹொட்டல் நிர்வாகமும் அவமதித்துள்ளது.

அந்த ஹொட்டல் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள Goenka, தனது ட்வீட்டில், இந்தியா சர்வதேச சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், எங்கள் சுற்றுலாப்பயணிகள் சிறந்த உலக தூதர்கள் ஆவார்கள் என்று கூறியுள்ளதோடு, நமது இமேஜை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் இந்தியர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது ட்வீட்டை படித்த பலரும், அவருக்கு ஆதரவாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, அவரது கருத்துக்களையும் வரவேற்றுள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers