சுவிட்சர்லாந்து நகரம் ஒன்றில் திடீரென கேட்ட வெடிச்சத்தம், அலறிய மக்கள்: பின்னர் தெரிய வந்த உண்மை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பது போன்ற சத்தத்தைக் கேட்டு மக்கள் அலறினார்கள்.

பலர் உடனடியாக பொலிசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். பின்னர் அது சுவிஸ் ராணுவத்தின் போர் விமானம் ஒன்று ஏற்படுத்திய ஒலி என்பது தெரியவந்தது.

நேற்று மதியம், மக்கள் உணவுக்குப்பின் அமைதியாக சாய்ந்திருக்கும் நேரத்தில் திடீரென வெடிச்சத்தம் போல் ஒரு சத்தம் கேட்க, மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

விசாரித்ததில், சுவிஸ் ராணுவத்தைச் சேர்ந்த சுவிஸ் ஜெட் ரக விமானம் ஒன்று, அவசரமாக, மிக வேகமாக சென்றதால் அந்த சத்தம் ஏற்பட்டதாக தெரியவந்தது.

திடீரென தரைக் கட்டுப்பாட்டு அறையுடன் விமானம் ஒன்றின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமோ என்பதை அறிவதற்காக அந்த போர் விமானம் மிக வேகமாக சென்றுள்ளதாலேயே அந்த பலத்த சத்தம் கேட்டுள்ளது.

பிரச்சினை எதுவுமில்லை என்ற தகவல் தவிர, ஏன் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது எந்த விமானம் என்பது போன்ற விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்