மரத்தை குடைந்து உருவாக்கப்பட்ட அபூர்வ சவப்பெட்டி: சுவிட்சர்லாந்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி ஒன்றின்போது இரும்பு யுகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் உடல் கிடைத்துள்ளது.

மதிப்பிற்குரிய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த அந்த பெண்மணி, மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அபூர்வ சவப்பெட்டி ஒன்றில் வைத்து புதைக்கப்பட்டிருந்தார்.

2000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் அந்த பெண்மணியின் உடை, மிகவும் உயர்ந்த ரக உடையாக இருந்ததோடு, அவர் விலையேறப்பெற்ற ஆபரணங்களையும் அணிந்திருந்தார்.

அவர், ஒரு கம்பளி உடை, ஒரு ஷால் மற்றும் அதன் மீது ஆட்டுத்தோலாலான ஒரு கோட் அணிந்து, ஆம்பர் மற்றும் கண்ணாடியாலான முத்துக்களைக் கொண்ட நெக்லஸ் ஒன்றையும் அணிந்திருந்தார்.

அவை அனைத்தும் எந்த சேதமுமின்றி அப்படியே பத்திரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து அந்த பெண்மணி சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஆர்கா பகுதிகளிலுள்ள Limmat பள்ளத்தாக்குப் பகுதிகளில் வளர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

அவர் இறக்கும்போது, அவருக்கு சுமார் 40 வயது இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், கி.மு 200 கால கட்டத்தைப் பொருத்தவரையில்,

அது நல்ல ஆயுள்காலம் என்று தெரிவித்துள்ளனர், காரணம், அந்த காலகட்டத்து மக்கள் அதிகபட்சம் 20 அல்லது 30 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர்.

அத்துடன் அவரது பற்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவர் அதிக சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கொண்ட உணவுகளை உண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...