சுவிஸில் சுற்றுலா வந்த இலங்கை இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபம்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சுற்றுலா வந்த இலங்கை இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St Gallen பகுதியில் உள்ள குளம் ஒன்றிலேயே 22 வயதான அந்த இளைஞர் மூழ்கி இறந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி செவ்வாய் அன்று மாலை சுமார் 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது குளத்தில் இறங்கிய இளைஞரை வெகு நேரமாகியும் காணவில்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அருகாமையில் இருந்தவர்கள் உடனடியாக குளத்தில் குதித்து அந்த இளைஞரை தேடியுள்ளனர்.

மட்டுமின்றி, அவசரகால மீட்பு குழுவினருக்கும் தகவல் அளித்து, அவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலம் கரையில் இருந்து 3 முதல் 4 மீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த நபருக்கு நீச்சல் தெரியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவர் தனியாக குளத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் St Gallen பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்