தான் வளர்ந்த ஊரை பார்க்க கேரளா வந்த சுவிஸ் அரசியல்வாதி: சுவாரஸ்ய பின்னணி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தான் சிறு வயதாக இருக்கும்போது வளர்ந்த ஊரை பார்ப்பதற்காக சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேரளா வந்துள்ளார்.

Niklaus Samuel Gugger (49) கர்நாடகத்தில் உள்ள உடுப்பியில் பிறந்தவர். அவரது பெற்றோர் அவரை உடுப்பியில் உள்ள பேஸல் மிஷன் மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றனர்.

அவரை தத்தெடுத்த ஓரு சுவிட்சர்லாந்து தம்பதியுடன் அவர் தனது நான்கு வயது வரை கேரளாவின் தலசேரியில் வாழ்ந்து வந்தார் Gugger.

பின்னர் அவர் அவரை தத்தெடுத்த பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கல்வியை முடித்தபின், பல வேலைகள் பார்த்த பிறகு அரசியலில் நுழைந்தார் Gugger. 2017ஆம் ஆண்டு Evangelical People’s Party என்னும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Gugger, சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Guggerக்கு ஒரு ஆசை, முகம் பார்க்காத தனது தாயை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை என்பதுதான் அவரது வருத்தம்.

தற்போது தனது மனைவி பிள்ளைகளுடன் கேரளாவுக்கு வந்துள்ள அவர், தான் சிறுவயதில் வளர்ந்த தலசேரி பகுதியை சுற்றிப்பார்த்து வருவதோடு இன்னும் சில நாட்கள் அங்கேயே செலவிட முடிவு செய்துள்ளாராம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்