சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி: ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
181Shares

ஐரோப்பாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தின் மிகவும் குறைவு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8% என உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பது மட்டுமல்ல ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க் நாட்டில் 1% இளம் தாய்மார்களே உள்ளனர்.

ஐரோப்பியா முழுவதும் கணக்கிடுகையில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை சராசரியாக 4% என கூறப்படுகிறது.

ஆனால் பல்கேரியா மற்றும் ருமேனியா நாடுகளில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 12% என தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் முதல் முறை கருத்தரிக்கும் சராசரி வயது 30 என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவில் இது 29 என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்