தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் சுவிஸ் நகரங்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலகின் பல நாடுகள் தங்கள் வருவாய்க்காக சுற்றுலாத்தொழிலையே நம்பியிருக்கும் நிலையில், சமீப காலமாகவே தொடர்ந்து சுவிட்சர்லாந்து நகரங்கள் சில, சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தன் பங்குக்கு, கலைக்கும் கலாச்சாரத்துக்கும் புகழ் பெற்ற Luzern நகரம், கூட்டம் கூட்டமாக சுற்றுலாப்பயணிகள் வருவதை குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஆண்டொன்றிற்கு Luzern நகருக்கு சுமார் 9.4 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அதாவது நாளொன்றிற்கு சுமார் 25,000 பேர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், பொது இடங்களில் கூட்டம் அதிகரிப்பதாலும் நகர மக்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சுற்றுலாப்பயணிகள் சிலர், இரவில் நகரத்தில் தங்காமலே சுற்றிப்பார்த்து விட்டு போய் விடுவதால், அவர்களால் அதிக அளவில் வருவாயும் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் கூட்டமாக வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் ஒன்று ஆலோசனையில் உள்ளதாக தெரிகிறது.

மார்ச்சில், பேருந்து ஒன்றிற்கு 120 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் விதிப்பது குறித்து ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

இதுபோக, சுரங்க வாகன நிறுத்துமிடம் ஒன்றை அமைக்க முன் வைக்கப்பட்ட திட்டம், அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் இறுதி வாக்கில், புதிய சுற்றுலா யுக்திகளை வெளியிட நகர நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்