48 மணி நேரத்தில் 800 முறை மருத்துவமனை அவசர சேவைகள் பிரிவுக்கு அழைத்த சுவிஸ் பெண்மணி!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் இரண்டு நாட்களில் சுமார் 800 முறை மருத்துவமனை அவசர சேவைகள் பிரிவுக்கு அழைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், தொடர்புடைய பெண்மணியின் தொலைபேசி மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளனர்.

லாசன்னேவில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திலும் Cery-ல் அமைந்துள்ள உளவியல் மருத்துவமனைக்கும் அவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உளவியல் மருத்துவமனை அவசர சேவைகள் பிரிவுக்கு வெறும் 48 மணி நேரத்தில் 400 முறை அழைத்துள்ளார்.

2019 பிப்ரவரி மாதம் லாசன்னேவில் அமைந்துள்ள பல்கலைக்கழக மருத்துவமனை அவசர சேவைகள் பிரிவுக்கு 5 மணி நேரத்தில் 50 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அதேவேளை மனநல அவசர சேவைகள் பிரிவுக்கு 150 முறை அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டுமின்றி ஜூன் மாதம் 1ஆம் திகதி மற்றும் 2ஆம் திகதியில் மட்டும் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு 800 முறை அழைத்துள்ளார்.

இதனையடுத்து பல்கலைக்கழக மருத்துவமனை புகார் அளித்துள்ளது. தொடர்ந்து குறித்த பெண்மணிக்கு அவருக்கு தேவையான சேவையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் இதன் பின்னரும் அவரால் தொலைபேசி அழைப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் அவரது தொலைபேசியையும் மொபைல் போனையும் விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால் இந்த முடிவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளார்.

அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், உளவியல் மருத்துவ அவசர பிரிவானது ஒருவரது அழைப்புகளுக்கு மட்டும் பதிலளித்துக் கொண்டிருப்பது முறையல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்