சிகிச்சை பெற வந்த 29 அழகான இளம்பெண்களிடம் அத்துமீறிய சுவிஸ் மருத்துவர் கைது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சிகிச்சை பெறுவதற்காக தன்னிடம் வந்த 60 பெண்களில் 29 பேரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் முடநீக்கு இயல் துறை மருத்துவராக பணியாற்றி வந்த ஒருவர், இன்று Rheintal மாகாண நீதிமன்றத்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 60 பெண்களில் 29 பேரிடம் அத்துமீறியதாக ஒப்புக்கொண்டார்.

மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரியவந்ததையடுத்து, அவரிடம் சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளிடமும் விசாரித்ததில் 29 பேர் தாங்கள் அந்த மருத்துவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டது தெரியவந்ததோடு, பலரும் அவர் மீது புகாரளிக்கவும் முன்வந்தார்கள்.

உடனடியாக அவரது மருத்துவம் செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது.

அந்த மருத்துவரிடம் வரும் பெண்கள் மூட்டு சம்பந்தமான சிகிச்சைக்கு வந்ததால், வெறும் உள்ளாடைகளுடன்தான் படுத்துக் கொள்ளவேண்டியிருந்தது.

அப்போது அந்த மருத்துவர் இனப்பெருக்க உறுப்புகளையும் பாலுறுப்புகளையும் தவறாக தொட்டதோடு, நோயாளிகளிடம் சொல்ல முடியாத விதத்தில் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

ஒரு பெண்ணிடம் தனது ஆசையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டதோடு, தன்னுடன் பாலுறவு கொள்ள ஆசையாக இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார் அந்த மருத்துவர்.

தாங்கள் தசை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைக்கு வந்துள்ளதால், இப்படிப்பட்ட தொடுதல் சிகிச்சைக்கு தேவையான ஒன்றாக இருக்குமோ என்று கூட சிலர் எண்ணியிருக்கிறார்கள்.

நோயாளிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் அத்து மீறியிருக்கிறார் அந்த மருத்துவர்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு, 40 மாதங்கள் சிறைத்தண்டனை, சுவிட்சர்லாந்தில் மருத்துவராக பணி செய்ய வாழ்நாள் தடை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் ஆகிய தண்டனைகள் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விரைவில் காணொளி கலந்தாய்வு முறையில் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ள அந்த மருத்துவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்