சுவிட்சர்லாந்தில் இருவர் கொலை வழக்கில் சிக்கிய இளம் தம்பதி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கொலை வழக்கு தொடர்பாக இளம் தம்பதி உள்ளிட்ட மூவர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி மூவரும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.

கொல்லப்பட்ட இருவரும் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொல்லப்பட்ட இருவரும் பல மணி நேரம் கட்டி வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட இருவரின் உயிரின் மதிப்பை கணக்கிட்டால், அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதற்கான காரணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என பொலிஸ் தரப்பு விமர்சித்துள்ளது.

பெர்ன் மண்டலத்தில் வாகனம் தொடர்பான தொழில் செய்து வந்துள்ளார் தற்போது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ள 29 வயது இளைஞர்.

சம வயதுள்ள இவரது மனைவியும், இவர்களின் உதவியாளரான 36 வயதான நபரும் சேர்ந்தே இந்த இரு கொலைகளையும் செய்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சூரிச் பகுதியில் உள்ள 36 வயது லொறி உரிமையாளரை, அவரது லொறியை பறிக்கும் நோக்கில் கொலை செய்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு 40,000 பிராங்குகள் வரை லாபமாக கிடைத்துள்ளது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 25 வயதான இளைஞரை பணம் மற்றும் பழிவாங்குவதற்காக கொன்றுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 40,000 பிராங்குகள் தொகையை கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டிய இவர்கள், அந்த இளைஞரின் இரு கார்களையும் ஏமாற்றி பறித்துள்ளனர்.

மேலும், அந்த கார்களை விற்று 16,000 பிராங்குகள் திரட்ட முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்