200 முறைக்கு மேல் ஒரே தவறை செய்ததால் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்: என்ன தவறு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

குடியுரிமை நேர்முகத் தேர்வில் பங்கேற்ற ஒரு பெண், பேசும்போது 200 முறைக்கு மேல் செய்த ஒரு சிறு தவறுக்காக அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.

அப்படி அவர் என்ன தவறு செய்தார்? நேர்முகத் தேர்வில், கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது ஆ (uh) என இழுத்து பேசியதற்காக ஈராக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.

ஈராக்கிய பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் 20 ஆண்டுகள் வாழ்ந்துள்ள நிலையிலும், குடியுரிமை பெறுவதற்காக நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் பதிலளிக்கும்போது ஆ (uh) என இழுத்து பேசியதற்காக அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த பெண்ணும் அவரது கணவரும் Ingenbohlஇல் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டு முயற்சிகளில் அவரது கணவருக்கு குடியுரிமை கிடைத்தது என்றாலும், அந்த பெண்ணின் விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

அவரது ஜேர்மன் மொழித்திறமை போதுமானதாக இல்லை என்று கூறி அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேர்முகத்தேர்வின்போது பதிவு செய்யப்பட்ட அந்த பெண்ணின் உரையாடலைக் கேட்ட நீதிபதி, போதுமான அளவு ஜேர்மன் மொழித்திறமை இல்லாத ஒரு பெண், சமுதாயத்தில் எப்படி திறம்பட பங்காற்ற இயலும் என கேள்வி எழுப்பினார்.

தற்போது அந்த பெண் வாழும் மாகாணம் அவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்று முடிவு செய்தாலன்றி, அவர் மேலும் தனது மொழித்திறனை வளர்த்துக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதுதான்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்