பண மோசடியில் ஈடுபட்டு சுவிஸில் தலைமறைவாக இருந்த பிரித்தானியர்: சிக்கியது எப்படி?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பிரித்தானிய பெண்மணியை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Bath பகுதியில் குடியிருக்கும் Carolyn Woods என்ற பெண்மணியே, பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு கரோலினிடம் இருந்து 45 வயதான மார்க் அக்லோம் என்பவர் சுமார் 300,000 பவுண்டுகள் கடனாக பெற்றுள்ளார்.

ஆனால் மார்க் அக்லோம் அப்போது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் குடியிருந்து வருவதை கரோலினிடம் இருந்து மறைத்துள்ளார்.

மட்டுமின்றி தம்மை ஒரு சுவிஸ் வங்கியாளர் எனவும் உளவுத்துறை அதிகாரி எனவும் கரோலினை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று தமது மொத்த சேமிப்பையும் மோசடி செய்து விட்டு மாயமான மார்க் தொடர்பில் கரோலின் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் மார்க் அக்லோம்.

தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் எங்கு குடியிருந்தாலும் அவரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே மார்க் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பதாக சுவிஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

சுவிட்சர்லாந்தில் மனைவி மற்றும் அவரது இரு பிள்ளைகளுடன் குடியிருந்த மார்க், இந்த ஆண்டு துவக்கத்தில் நாடு கடத்தப்பட்டார்.

தற்போது மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்