ஐரோப்பிய பொலிசாருடன் இணைந்து சுவிஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை: 70 பேர் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
177Shares

சிறார்களை கடத்தும் கும்பலுக்கு எதிராக ஐரோப்பிய பொலிசாருடன் இணைந்து சுவிட்சர்லாந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்களை கடத்தி பாலியல் தொழிலுக்கும், கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பது மற்றும் கொத்தடிமைகளாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை மேற்கொள்ளும் கும்பலுக்கு எதிராக ஐரோப்பிய பொலிசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சமீபத்தில் நடந்த அதிரடி நடவடிக்கையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 36 நபர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 17 முதல் 23 ஆம் திகதி வரை சுமார் 127,000 தனி நபர்களை விசாரித்துள்ளனர்.

சுமார் 63,800 வாகனங்களை சோதனையிட்டுள்ளனர். 1,100 பகுதிகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட 206 பேரை பொலிசார் மீட்டுள்ளனர். அதில் 53 பேர் சிறார்கள் என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது பிரித்தானியாவின் தலைமையில் சுவிஸ் மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட எஞ்சிய 15 ஐரோப்பிய நாடுகளால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்