சிறுமிகளை கடத்தி தகாத தொழிலா? ஐரோப்பிய பொலிசுடன் கைகோர்த்த சுவிட்சர்லாந்து

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

குழந்தைகளை கடத்தும் கும்பலை பிடிக்க ஐரோப்பிய பொலிசுக்கு சுவிட்சர்லாந்தும் உதவி செய்துள்ளதாக Europol அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் 17 ஐரோப்பிய நாடுகளுடன் ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தும் பங்கேற்றது. இதன்படி கடந்த யூன் மாதம் நடந்த தேடுதல் வேட்டையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கடத்தல் தொடர்பில் 34 கைதும், சட்ட விரோதமாக குடியேறுவது, திருட்டு உட்பட மற்ற குற்றச்செயல்களில் 36 கைதும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

1100 க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடந்ததாகவும், 63000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்களாக 206 பேர் அடையாளம் காணப்பட்டதில், 53 பேர் சிறுவர், சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்