சுவிற்சர்லாந்தில் புகழ்பெற்ற மலையில் இறந்து கிடந்த பிரித்தானியர்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் புகழ்பெற்ற மலையில் இருந்து தவறி விழுந்து அடையாளம் காணப்படாத பிரித்தானியர் இறந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த அடையாளம் காணப்படாத 24 வயது இளைஞர் ஒருவர், ஹோர்ன்லி மலையிலிருந்து கீழே வந்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் சுமார் 3,380 மீட்டர் உயரத்தில் நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த சமயத்தில் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த மற்ற இரண்டு இளைஞர்களுக்கு காயமில்லை என வலாய்ஸ் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்