சுவிட்சர்லாந்தில் பண மோசடியில் ஈடுபட்ட பிரித்தானியர்: தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பிரித்தானியாவில் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவரான மார்க் அக்லோம் சுவிட்சர்லாந்திலும் பண மோசடி உள்ளிட்ட கைவரிசையை காட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதியப்பட்டு அவருக்கு 120 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தின் Wädenswil பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து பிரித்தானியா மற்றும் சுவிஸ் பொலிசாரால் 45 வயதான மார்க் அக்லோம் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள மார்க் அக்லோம், பிரித்தானியாவில் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இவர் மீது கரோலின் உட்ஸ் என்பவர் அளித்த பண மோசடி மற்றும் வஞ்சனை புகாரே தற்போது சிறை தண்டனை வரை கொண்டு சேர்த்துள்ளது.

பிரித்தானியரான கரோலினிடம் இருந்து சுமார் 354,000 பிராங்குகள் வரை மார்க் அக்லோம் கடனாக பெற்று, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

ஆனால், தமது கடன் மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் நன்கு அறிந்த பின்னரே கரோலின் பண உதவி செய்ததாக மார் அக்லோம் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான கரோலின் இதை மறுத்துள்ளார். தம்மை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நிலையிலேயே, கடனை வாங்கி தாம் பண உதவி செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்