காஷ்மீர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தனது நாட்டு மக்களுக்கு ஒரு பயண ஆலோசனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எப்போதுமே ஜம்மு காஷ்மீருக்கு செல்வதற்கெதிராகவே தனது நாட்டு மக்களுக்கு ஆலோசனை கூறிவந்த சுவிட்சர்லாந்து, தற்போது அங்கு நிலவும் சூழலையொட்டி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்களும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே சுவிஸ் குடிமக்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதை, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்வதை தவிர்க்குமாறு சுவிட்சர்லாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

என்றாலும், லடாக் பகுதிக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் செல்லலாம் என்றும், நேரடியாக Leh விமான நிலையத்துக்கு செல்வதையோ அல்லது மணாலியிலிருந்து Leh செல்லும் பாதையையோ தேர்வு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெறும் 80,000திற்கும் குறைவு என்று கூறப்படுகிறது.

ஆனால் 2017இல் சுமார் 50,000 சுவிஸ் நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்