இலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம் குறைகிறதா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரில் இலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில், தற்போது புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை ஒப்பிடும்போது, 2019இல் அதே காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளோரின் எண்ணிக்கை 11% குறைந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அரசு புள்ளிவிவரங்களின்படி, 3,347 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அந்த விண்ணப்பங்களில் பெரும்பான்மை, எரித்ரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையிலிருந்து வந்தவை.

ஜூன் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான அலுவலகம் ஒன்று, 1,470 புகலிடக்கோரிக்கைகளை பரிசீலித்தது.

அவற்றில் 272 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன, 433 பேருக்கு புகலிடம் அளிக்கப்பட்டது, 333 பேருக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

மாத இறுதியில், 10,218 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.

இந்த செய்தி வெளியானதும், அவசர அவசரமாக, சுவிஸ் மக்கள் கட்சி, புகலிடம் கோரி வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அந்த எண்ணிக்கை 125,000 ஆக உள்ளதாகவும், இது 2018ஐ விட 2,500 அதிக என்றும் கூறத் தவறவில்லை.

அவர்களில் பலர் பொருளாதார புலம்பெயர்வோர் என்று கூறியுள்ள அந்த கட்சி, அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக ஆண்டொன்றிற்கு 6 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடப்படுவதாகவும், அதற்கு ஒரு காரணம், அவர்கள் பெரும்பாலும் நிதியுதவியையே நம்பி இருப்பதுதான் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்