சுவிட்சர்லாந்து தெருக்களில் பரவலாக காணப்படும் ஒரு படம்: தலைப்புச் செய்தியானதன் பின்னணி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள ஒரு படம் இவ்வாரம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

அது சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) பிரச்சார போஸ்டராகும். ஆப்பிள் ஒன்றை புழுக்கள் உண்ணுவதுபோல் அந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி SVP கட்சியின் பிராசாரத்திற்காக அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த படத்திலிருக்கும் ஆப்பிள் சுவிட்சர்லாந்தின் புராணக்கதைகளில் ஒன்றில் வரும் வில்லியம் டெல் என்பவரை நினைவுகூர்வதோடு, சுத்தமான சுவிட்சர்லாந்தையும் குறிக்கிறது.

ஐரோப்பியக் கொடி ஒட்டப்பட்டுள்ள அந்த ஆப்பிளை சாப்பிடும் புழுக்களின் உடல்மீது, சுவிட்சர்லாந்தின் முக்கிய கட்சிகளின் கொடிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதன் கீழ், நாம் சுவிட்சர்லாந்தை இடது சாரியினரும் ஐரோப்பிய ஒன்றியவாதிகளும் அழிக்க விடப்போகிறோமா? என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

அந்த போஸ்டருக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராதவிதமாக SVP கட்சிக்குள்ளிருந்தே அதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அந்த போஸ்டர் நாசிக்களின் பிரச்சார போஸ்டர் போல் இருப்பதாக எதிர்க்கட்சிகளும், இப்படி ஒரு படத்தை பிரச்சாரத்திற்காக தேர்ந்தெடுத்ததற்காக SVP கட்சியினரும் அதை குறைகூறிவருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்