ஆல்ப்ஸ் மலையில் மோதி தீப்பிடித்த விமானம்: குழந்தை உட்பட மூவர் பலி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையில்,இலகு ரக விமானம் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர சம்பவத்தில், ஒரு குழந்தை உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சுவிட்சர்லாந்திலிருந்து நேற்று காலை 9 மணியளவில் இத்தாலி நோக்கி புறப்பட்ட அந்த விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மலையில் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, ஒரு பயணி மற்றும் ஒரு சிறு குழந்தை ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இறந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வலாயிஸ் மாகாண பொலிசார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணமும் தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...