குடியிருப்பில் தண்ணீர் குழாயை திறந்து விட்ட மர்ம நபர்கள்: 100,000 ஃப்ராங்குகள் அளவுக்கு சேதம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தண்ணீர்க்குழாய் ஒன்றை மர்ம நபர்கள் திறந்துவிட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

Sankt Gallen மாகாணத்தில் அமைந்துள்ள Buchs நகரிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள தண்ணீர்க்குழாயை யாரோ வேண்டுமென்றே திறந்து விட்டிருக்கிறார்கள்.

வீடு ஒன்றிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அந்த தண்ணீர்க்குழாயை யாரோ திறந்து விட்டுச் செல்ல, இரவு முழுவதும் பாய்ந்த தண்ணீர், பால்கனியை நிரப்பி, பின்னர் பல வீடுகளை வெள்ளக்காடாக்கியதோடு, பல மாடிகளில் வழிந்தோடி அங்கிருந்த எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது.

இதனால் 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பொலிசார் தண்ணீர்க்குழாயை திறந்து விட்டவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...