சுவிட்சர்லாந்தில் நடமாடும் ஓநாய் குடும்பம்: கமெராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் மாகாணத்தில் ஓநாய்க் கூட்டம் ஒன்று நடமாடும் காட்சிகள் கமெராவில் பதிவாகியுள்ளன.

தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு கமெராவில், ஏழு குட்டிகளையுடைய ஓநாய்க் குடும்பம் ஒன்று சுவிஸ் மேற்கு மாகாணமாகிய வலாயிஸ் பகுதியில் நடமாடுவது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வலாயிஸ் மாகாணத்திலுள்ள Vionnaz மற்றும் Vouvry பகுதிகளில் ஓநாய்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு கமெராக்கள் பொருத்தப்பட்டன.

அந்த ஓநாய்க் குடும்பத்தில் ஒரு பெண் ஓநாய், இரண்டு ஆண் ஓநாய்கள் மற்றும் ஏழு குட்டிகள் உள்ளன.

நீண்ட கால இடைவெளிக்குப்பின், கடந்த 20 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்துக்கு மீண்டும் ஓநாய்கள் வரத்துவங்கியுள்ளன.

தற்போதைக்கு சுவிட்சர்லாந்தில் 40 ஓநாய்கள் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் ஓநாய்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்றாலும், அந்தந்த மாகாணங்கள் அவற்றைக் கொல்வதற்கான உரிமம் வழங்குவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்