சூரிச் குடியிருப்பு ஒன்றில் இரவு நேரத்தில் கேட்ட துப்பாக்கி சத்தம்: மீட்கப்பட்ட இரு சடலங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், குடியிருப்பு ஒன்றில் இருந்து மரணமடைந்த நிலையில் இரு சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Zurich-Albisrieden பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சுமார் 9 மணியளவில் திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையில் ஏற்பட்டுவரும் அதிகாரிகளிடம் அப்பகுதி நபர் ஒருவர் இதை தெரியப்படுத்தியுள்ளார்.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் மிகவும் கொடூரமான வகையில் இருந்ததாகவும், அதுவரை பார்த்ததில் மிகவும் மோசமாக காணப்பட்டதாகவும் இன்னொரு நபர் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்த குடியிருப்பில் இருந்து பெண் ஒருவரை பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் பலருடனும் தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளனர்.

மட்டுமின்றி, ஆயுதம் ஏந்திய பொலிசாரை அந்த குடியிருப்புக்கு காவலாகவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு பாதிப்போ ஆபத்தோ ஏற்பட வாய்ப்பில்லை என பொலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்