சுவிட்சர்லாந்தில் 190,000 பணியிடங்கள் நிரப்பப்பட தயார்: நர்ஸ்கள் முதல் எலெக்ட்ரிசியன்கள் வரை விண்ணப்பிக்கலாம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஆகத்து மாதம் 15ஆம் திகதி கணக்குப்படி 188,749 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சுவிஸ் நிறுவனமாகிய x28 தெரிவித்துள்ளது.

இது இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களின் அடிப்படையில் இல்லாமல், பணி வாய்ப்பு இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கொடுத்துள்ள விவரமாகும்.

இந்த பணியிடங்களில் பாதிக்கும் மேல் (107,440)வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பணியிடங்களாகும்.

அது மட்டுமின்றி அவற்றில் 10 சதவிகிதத்திற்கும் அதிகம் மேலாளர் மட்டத்திலான பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி வேலைகளாக பார்த்தால், அதிக காலியிடங்கள் நர்ஸ் பணிக்காகும் (5,865). அதைத் தொடர்ந்து 3,716 எலக்ட்ரிசியன்களுக்கான பணியிடங்களும், 3,451 மென்பொருள் உருவாக்குவோர், 2,771 புராஜக்ட் மேனேஜர்கள் மற்றும் 2,764 சேல்ஸ் கன்ஸல்டண்ட்களுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளன.

சுவிட்சர்லாந்தின் வேலையில்லாதோர் வீதம் 2.1 சதவிகிதம். இது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச பணியாளர் அமைப்பின் விளக்கத்தின்படி, அதாவது நாடு முழுவதும் வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேலையில்லாதோர் வீதம் 4 சதவிகிதம் ஆகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்