வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டுமா? வெளியான பதில்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும் காப்பீட்டு அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

மட்டுமின்றி எந்த நாட்டவர் என்பதை அறிந்த பின்னரே, அவர் செலுத்த வேண்டிய காப்பீட்டு சந்தா தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இந்த விவகாரம் தொடர்பில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்ட இளைஞர் ஒருவர் புதிதாக கார் ஒன்றை வாங்கி காப்பீட்டு சந்தா கோரினால் அவருக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் வெளியான தரவுகளின் அடிப்படையில், அல்பேனிய நாட்டவர்கள், உள்ளூர் சாரதிகளை விடவும் 95% அதிக கார் காப்பீட்டு சந்தா செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள இத்தாலியர்கள் 22% செலுத்துவதாகவும், இது அவர்கள் காப்பீட்டு நிறுவனத்தை பொறுத்து வேறுபடும் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் எந்த நாட்டினர்கள் மிக குறைவான கார் காப்பீட்டு சந்தா செலுத்துகிறார்கள் என்ற தகவலை சுவிஸ் காப்பீட்டு சங்கம் வெளியிட மறுத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers