சுவிஸ் பேருந்து நிறுத்தத்தில் 2 வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயர சம்பவம்: வாய்விட்டு கதறிய தாயார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Schaffhausen நகரில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் தாயாருடன் நின்றிருந்த 2 வயது குழந்தை பேருந்து சக்கரத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Schaffhausen நகரில் திங்களன்று பகல் சுமார் 14.15 மணியளவில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

45 வயதான சாரதி ஒருவர் பேருந்துடன் Birch பகுதி நோக்கி பயணமாகியுள்ளார். அப்போது Plattenweg பேருந்து நிறுத்தத்தில் தாயார் ஒருவர் தமது இரு பிள்ளைகளுடன் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத வகையில் அவரின் இரண்டு வயது குழந்தை பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்ட சாரதி, துரிதமாக செயல்பட்டு பேருந்தை பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.

இதனால் சக்கரத்தில் சிக்கிய 2 வயது குழந்தை, ஆபத்து ஏதும் இன்றி காயங்களுடன் தப்பியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு,

குழந்தையை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பேருந்துக்கு எந்த பாதிப்பு இல்லை எனவும், சாரதியின் துரிதமான செயல்பாடே குழந்தை ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

பேருந்து சக்கரத்தில் குழந்தை சிக்கிய நேரம் அதன் தாயார் வாய்விட்டு கதறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் Schaffhausen பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்