சுவிட்சர்லாந்தில் மனிதர்களுக்கு அஞ்சாத ஓநாய்களின் நடமாட்டம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஓநாய்கள் மனிதர்களுக்கு பயப்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்கிறார்கள் சுவிஸ் விவசாயிகள்.

நேற்று வலாயிஸ் எல்லைக்கு சற்று மேலுள்ள St Gingolph நகரில், பட்டப்பகலில் இரண்டு ஆடுகளை ஓநாய்கள் கொன்று தின்றுள்ளன.

காலை 7 மணிக்கு தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட ஆடு மேய்ப்பவர்கள், 3 மணியளவில் இரண்டு ஆடுகள் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். இப்படி கட்டிடங்களுக்கு அருகில், அதுவும் பட்டப்பகலில், ஓநாய்கள் ஆடுகளைக் கொல்வது அபூர்வமாகும்.

இதேபோன்ற இன்னொரு சம்பவத்தில், இரவு நேரத்தில் உள்ளூர் ஆடு மேய்ப்பவர் ஒருவர் தனது மந்தையை சோதிக்கும்போது, இரண்டு ஓநாய்கள் நிற்பதை தனது டார்ச் விளக்கின் உதவியுடன் கவனித்திருக்கிறார்.

முன்பெல்லாம் ஆட்கள் நிற்பதைக் கண்டால் ஓநாய்கள் ஓடிவிடும் என்றும், இம்முறை அவை ஓடாமல் அப்படியே நின்றதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

அந்த விடயம் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் அவர். ஆனால் வலாயிஸ் மாகாணத்தைச் சேர்ந்த உயிரியலாளர் ஒருவர், இது குறித்து அதிக கவலைப்பட தேவையில்லை என்கிறார்.

அதிக ஓநாய்கள் நடமாடுவதால், அதிக தாக்குதல்கள் நடப்பது சகஜம்தான் என்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்