நள்ளிரவில் தூங்க இடம் அளித்து சுவிஸ் சிறுமியை சீரழித்த கும்பல்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் நள்ளிரவில் தூங்க இடம் அளித்து 13 வயது சுவிஸ் சிறுமியை சீரழித்த மூவர் கும்பலுக்கு சிறையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் பிராந்திய நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து பெர்ன் உயர் நீதிமன்றத்தில் முறையிடுவதில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் பின் வாங்கியுள்ளனர்.

இதனால் கடந்த ஆண்டு பிராந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதி என தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெர்ன் மண்டலத்தில் வைத்து 13 வயது சிறுமி மூன்று இளைஞர்களால் கூட்டு வன்புணர்வுக்கு இரையானார்.

சம்பவத்தன்று குறித்த சிறுமி குடியிருப்பில் இருந்து வெளியேறி, தனியாக பேருந்து பயணத்தில் ஏற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுமார் 3 மணியளவில் அவருக்கு தூங்க இடம் அளித்துள்ளனர் 24, 20 மற்றும் 18 வயதுடைய மூன்று இளைஞர்கள்.

அதில் ஒருவர் அந்த அறைக்குள் புகுந்து, குறித்த சிறுமியை மிரட்டி சீரழித்துள்ளார். தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரம் எஞ்சிய இரு இளைஞர்களும் சிறுமியுடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையில், குறித்த சிறுமி வயது முதிர்ந்தவராக தம்மை காட்டிக்கொண்டதாகவும், அவர் சிறுமி என தங்களுக்கு தெரியாது எனவும் மூன்று இளைஞர்களும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தப்பித்துக் கொள்ள வழி தெரியாததாலையே அவ்வாறு நடந்து கொண்டதாகவும், அதுவே தமக்கு வினையாக மாறியது என சிறுமி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, மூவரும் மது போதையில் இருந்ததால் அப்போது என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை எனவும்,

அவரின் ஒப்புதலின் படியே தாங்கள் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிர் பயத்தால் அவர்களை தாம் எதிர்க்கவில்லை என சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த பிராந்திய நீதிமன்றம், கடந்த 2018 ஆம் ஆண்டு இளைஞர் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது மேல்முறையீட்டில் இருந்து மூவரும் பின் வாங்கியுள்ளதால், பிராந்திய நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளுடன் கூடிய சிறை தண்டனையும் 35,000 பிராங்குகள் அபராதமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்