சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய அறிவியலாளருக்கு உயரிய விருது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரித்தானிய அறிவியலாளர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் உயரிய விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்!

பிரித்தானியாவைச் சேர்ந்தவரான Nicola Spaldin என்னும் அறிவியலாளர் multiferroics என்னும் பொருட்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வுக்காக அவருக்கு Marcel Benoist பரிசு என்னும் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Multiferroics என்பவை காந்தம் போல் செயல்படும், மின்புலத்திற்கேற்ப எதிர்வினை புரியும் அசாதாரண வகை பொருட்கள் ஆகும்.

அதனால் இந்த பொருட்களை கணினி சிப்களில் சிலிகானுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

Spaldin, அல்ட்ரா வேக மற்றும் ஆற்றல் திறன் கொண்ட தரவு சேமிப்பகத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளார் என்று Benoist அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பிறந்த Spaldin, 2011இல் சூரிச் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக இணைந்தார்.

Spaldinஇன் கண்டுபிடிப்பின் விளைவாக கணினிகளின் வேகம் மிகவும் அதிகரிப்பதோடு, சிறிய அளவிலான தரவுகளை சேமிக்கும் கருவிகளும் மருத்துவ உபகரணங்களும் தயாரிக்கப்படலாம்.

Spaldinக்கு 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசாக கிடைக்க உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்