சுவிஸ் இளம் பெண் வெளியிட்ட விளம்பரம்.... குவிந்த 300 இளைஞர்கள்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவால், அவர் குடியிருப்பில் குவிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை பொலிசார் கலைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Winterthur நகரில் இந்த பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தங்களது குழுவினருக்கு பொதுவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விளம்பரம் செய்துள்ளார்.

அதில் எத்தனை பேர் கலந்து கொள்வீர்கள் என்பது தெரியாது, ஆனால் அருகாமையில் குடியிருப்புகள் இருப்பதை விருந்தில் கலந்து கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு,

அவரது முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.

இந்த விளம்பரம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விவாவதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, பலர் இந்த விருந்து அழைப்பானது பொதுவானது என கருதி, குறித்த மாணவியின் குடியிருப்பு அருகே குவிந்துள்ளனர்.

இரவு 8 மணியளவில், பல்கலைக்கழக மணவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் என சுமார் 300 பேர் குறிப்பிட்ட அந்த முகவரியில் குவிந்துள்ளதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மட்டுமின்றி, அந்த பகுதியானது திடீரென்று கலவரப் பகுதியாக மாறியதால் அங்குள்ள பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விருந்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதுபானம் வழங்கப்படும் என்பதாலையே பலர் அங்கு குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நள்லிரவுக்கு முன்னர் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், அங்கு குவிந்திருந்த இளைஞர்களை கலைந்து செல்ல பணித்துள்ளனர்.

மட்டுமின்றி விருந்துக்கும் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து இளைஞர்கள் பலர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்