அதிவேகமாக கார் ஓட்டியதாக சுவிஸ் குடிமகனுக்கு பொலிசார் அனுப்பிய நோட்டீஸ்: பின்னர் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவிலுள்ள ஒருவருக்கு அரசிடமிருந்து வந்த தபாலில் அவர் அதிவேகமாக கார் ஓட்டியதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்.

காரணம், அவர் கார் ஓட்டி வெகு காலமாகிவிட்டிருந்தது.

ஆனால், தெளிவாக கார் நம்பருடன், அவரது கார் அதிவேகத்தில் சென்றபோது பல முறை பொலிசாரின் தானியங்கி கமெராக்களில் சிக்கியதை பொலிசார் உறுதி செய்தனர். அதுவும் ஒரே கமெராவில் இருமுறை சிக்கியிருந்தது அந்த கார்.

பின்னர்தான் தெரியவந்தது, அந்த நபரின் மகனே, தந்தைக்கு தெரியாமல், அவரது காரை திருடிச் சென்றிருக்கிறார் என்ற உண்மை அந்த 18 வயது இளைஞரிடம் ஓட்டுனர் உரிமமும் இல்லாததால், காரை திருடியது, அதிவேகமாக ஓட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருப்பதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்