அந்த ஒரு காரணத்தால் ஆண்டுக்கு 5 பில்லியன் பிராங்குகளை செலவிடும் சுவிஸ் அரசு: பகீர் கிளப்பும் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புகைப்பதால் ஏற்படும் நோய்களுக்காக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் பிராங்குகளை அரசு செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் மருத்துவ செலவினங்களில் 4% தொகையை புகை தொடர்பான நோய்களுக்காக செலவிடப்படுகிறது.

மட்டுமின்றி நாட்டில் 14 சதவிகித மரணமும் புகை காரணமாக ஏற்படுகிறது என ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்பட்ட மருத்துவ செலவானது 3 பில்லியன் பிராங்குகளாக இருந்தது.

இதில், புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க CHF1.2 பில்லியன், இருதய நோய்களுக்கு CHF1 பில்லியன் மற்றும் சுவாச நோய்களுக்கு CHF0.7 பில்லியன் என செலவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சுவிஸ் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 2 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு சரிவையும் சந்திக்க நேர்ந்தது.

2015 ஆம் ஆண்டு மட்டும் புகையிலை தொடர்பான மரணங்கள் 9,535 எனவும், ஆனால் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 253 எனவும், காய்ச்சல் தொடர்பான நோய்களால் 2,500 பேர் மரணமடைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்