சுவிட்சர்லாந்தில் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர் மையங்கள் மறு அறிவிப்பு வரும்வரையில் மூடல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

புலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகம் செலவுகளை குறைக்கும் நோக்கில் தற்காலிகமாக இரண்டு புகலிடக்கோரிக்கையாளர் மையங்களை மூட முடிவு செய்துள்ளது.

இதனால் ஆண்டொன்றிற்கு சுமார் 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பெர்னிலுள்ள Kappelen மற்றும் பேஸலிலுள்ள Muttenz என்னும் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர் மையங்கள் மறு அறிவிப்பு வரும்வரையில் மூடப்பட உள்ளன.

2014ஆம் ஆண்டில் புகலிடக் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் நோக்கில் 5,000 புகலிடக்கோரிக்கையாளர் மையங்களை அமைப்பதற்கு அரசு சம்மதம் தெரிவித்தது.

இதனால் ஆண்டொன்றிற்கு 29,000 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

தற்போதைக்கு 4,000 புகலிடக்கோரிக்கையாளர் மையங்கள் உள்ள நிலையில், அவற்றில் பாதியில்தான் ஆட்கள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து புகலிடம் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதியில் சுமார் 14,500 விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2007லிருந்து பார்த்தால் உள்ளதிலேயே இதுதான் குறைவான எண்ணிக்கையாகும்.

எனவே, மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் மையங்களை மீண்டும் திறந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...