சுவிட்சர்லாந்தில் தூக்கத்தில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: சிக்கலில் வெளிநாட்டவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
368Shares

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் தூக்கத்தில் இருந்த பெண்மணியை தோழி என்றும் பாராமல் இளைஞர் ஒருவர் சீரழித்த சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு விழானன்று வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

துருக்கி நாட்டவரான 33 வயது நண்பரை பாதிக்கப்பட்ட சுவிஸ் பெண்மணி, தமது புதிய குடியிருப்புக்கு அழைத்துள்ளார்.

புதிய குடியிருப்பு என்பதால் தமக்கு துணையாக இன்று ஒரு நாள் மட்டும் தங்கிச் செல்ல அந்த நண்பரிடம் அவர் கோரியுள்ளார்.

இந்த நிலையில் இருவரும் படுக்க சென்றுள்ளனர். அப்போது குறித்த சுவிஸ் பெண்மணியை அவர் கட்டியணைக்க விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அந்த சுவிஸ் பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 2 மணியளவில், அந்த பெண்மணியை வலுக்கட்டாயமாக தமது இச்சைக்கு உட்படுத்த முயன்றுள்ளார் அந்த துருக்கி நாட்டவர்.

இதில் வெற்றியும் பெற்றுள்ளார். இருப்பினும் குறித்த சுவிஸ் பெண்மணி அந்த நபரின் பாலியல் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார்.

ஆனாலும், அந்த நபரிடம் இருந்து தப்பிக்க முடியாத நிலையில், அவரின் இச்சைக்கு இவர் இரையாகியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னர், அதன்படியே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது.

இந்த வழக்கிலும், துருக்கியருக்கு எதிரான வாக்குமூலம் பலமாக இருப்பதால், அவர் தண்டிக்க வாய்ப்பு அதிகம் எனவும், நாடுகடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்