சுவிட்சர்லாந்தில் அப்பாக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அப்பாக்களுக்கு ஊதியத்துடன் கூடிய இரண்டு வார பிரசவ விடுப்பு அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் அப்பாக்கள் ஊதியத்துடன் கூடிய இரண்டு வார பிரசவ விடுப்பு பெறும் திட்டத்திற்கு சுவிஸ் நாடாளுமன்றம் நேற்று தனது ஆதரவை தெரிவித்தது. குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் அப்பாக்கள் அந்த விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு முன்பு குழந்தை பிறந்த அன்று மட்டுமே அப்பாக்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும் என்று இருந்த நிலை தற்போது மாறியுள்ளது.

இந்த திட்டத்தால் 229 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் உபரி செலவு ஏற்பட உள்ள நிலையில், அந்த செலவை பணியாளர்களும், பணி வழங்குவோரும் தக்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள உள்ளனர்.

அம்மாக்களைப் பொருத்தவரையில், அவர்களுக்கு 80 சதவிகித ஊதியத்துடன் 14 வாரங்கள் பிரசவ விடுப்பு அளிக்கும் நடைமுறை சுவிட்சர்லாந்தில் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers