உலகிலே ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் நாடுகள்.. இங்கு இடம் பெயர்ந்தால் நீங்களும் கோடீஸ்வரர்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்தால் 100 சதவிதத்திற்கும் மேலாக சம்பள உயர்வு பெறலாம் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

1st Move International நடத்திய ஆய்வில், உலகிலே சுவிட்சர்லாந்து சிறந்த ஊதியம் அளிக்கும் நாடு என்று கண்டறியப்பட்டுள்ளது, சராசரியாக ஆண்டு சம்பளமாக 75,645 பவுண்ட் அளிக்கிறது. பிரித்தானியா 35,423 பவுண்ட் வழங்குகிறது.

அதே சமயம் சுவிஸில் துப்புரவாளர்களுக்கு, ஊதிய உயர்வு 175 சதவிதம் வரை அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டள்ளது. பிரித்தானியாவில் துப்புரவாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 14,721 பவுண்ட் சம்பளத்தைப் பெறுகிறார்கள். சுவிட்சர்லாந்தில், அவர்கள் 40,365.25 பவுண்ட் வரை சம்பாதிக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

சுவிஸை தொடர்ந்து ஜப்பான், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் துப்புரவாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள பெல்ஜியம் துப்புரவாளர்களுக்கு பிரித்தானியாவை விட 69 சதவீதம் அதிக சம்பளம் வழங்குகிறதாம்.

அமெரிக்கா (62,526 பவுண்ட்), நியூசிலாந்து (53,869 பவுண்ட்), ஜப்பான் (52,442 பவுண்ட்) மற்றும் அவுஸ்திரேலியா (49,854 பவுண்ட்) ஆகியவையும் அனைத்து தொழில்களிலும் மிக உயர்ந்த சராசரி சம்பளத்தை வழங்கும் நாடுகளாக திகழ்கின்றன.

ஒட்டுமொத்தமாக சுவிட்சர்லாந்து அதிக சம்பளம் வழங்கும் நாடு என்றாலும், அளவு சர்வேயர்கள் நியூசிலாந்தில் 4,92,000 பவுண்ட் சம்பளத்தை சம்பாதிக்க முடியுமாம், அதே நேரத்தில் சீனா விமானிகளுக்கு சிறந்த இடமாக உள்ளது, அந்த பணிக்கு ஆண்டுக்கு 2,56,806 பவுண்ட் செலுத்துகின்றன.

இதற்கிடையில், மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அமெரிக்காவில் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர், முறையே 1,50,000 பவுண்ட் மற்றும் 1,10,000 பவுண்ட் சம்பாதிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்து கட்டடக் கலைஞர்களுக்கு ஒரு பிரதான இடமாகும், அவர்கள் ஆண்டு சம்பளம் 1,00,275 பவுண்ட் பெறுகின்றனர். அதே போல் வணிக நிதி மேலாளர்கள் ஆண்டுக்கு 9,7,468 பவுண்ட் சம்பாதிக்க முடியும்.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆய்வில் அர்ஜென்டினா மிக மோசமான ஊதியம் வழங்கும் நாடாக இருந்தது, சராசரியாக 5,566 பவுண்ட் சம்பளம் அளிக்கிறது, இது பிரித்தானியாவை விட 84 சதவிதம் குறைவாகும். அர்ஜென்டினாவை தொடர்ந்து இந்தியா (10,780 பவுண்ட்), தென் ஆப்பிரிக்கா (18,278 பவுண்ட்), ரஷ்யா (22,510 பவுண்ட்) மற்றும் போர்ச்சுகல் (27,211 பவுண்ட்).

நியூசிலாந்தில் அளவு சர்வேயர்கள் மற்றும் சீனாவில் உள்ள விமானிகளுக்கான மகத்தான சம்பளம் போன்ற வியத்தகு வேறுபாடுகள், இந்த நாடுகளுக்கு குறித்த பணிகளை நிரப்ப அதிக தேவை உள்ளதை காட்டுகிறது, அதே பணிக்கு பிரித்தானியாவில் வாய்ப்பில்லை என்று 1st Move International-ன் Jack Limerick விளக்கினார்.

உலகெங்கிலும் சம்பளம் வேறுபடுவதில் ஆச்சரியமில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில், வெளிநாட்டிற்குச் செல்வதன் மூலம் உங்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கவோ அல்லது மும்மடங்காகவோ செய்ய முடியும் என்பது மிகவும் வியக்க வைக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்