புற்றுநோய் பாதித்தும் மற்றவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் ஒரு அதிசய பெண்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்கு வந்த முதல் நாளே தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியவந்த ஒரு பெண், இன்று பலருக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்துகொண்டு இருக்கிறார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த Kartika Versteden (48) ஒரு புது வாழ்வை துவங்குவதற்காக மூன்று ஆண்டுகளுக்குமுன் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தார்.

சுவிட்சர்லாந்துக்கு வந்த முதல் நாளே, அவருக்கு அவரது மருத்துவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

Kartikaவுக்கு அது ஒரு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆம், அவரது மருத்துவர், Kartikaவுக்கு புற்றுநோய் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்.

Bild: de

அதன் பிறகு வாழ்வே மாறிப்போனது Kartikaவுக்கு. மூன்று அறுவை சிகிச்சைகள், 36 கதிரியக்க சிகிச்சைகள் என பல சிகிச்சைகளுக்குட்பட்டதன் விளைவாக சுவை அறியும் திறனை இழந்தார் Kartika.

ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுங்கள் என அவரது மருத்துவர் அளித்த ஆலோசனை Kartikaவின் வாழ்வை மீண்டும் மாற்றியது, இம்முறை நேர்மறையாக! நேர்த்தியான கற்களில் வண்ணம் தீட்டி, அவற்றில் ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும்’ என்று எழுதி, அவற்றை குறிப்பிட்ட இடங்களில் கொண்டு வைக்கிறார் Kartika, தனது கணவர் உதவியுடன்.

இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்றால், பல நாடுகளில் இத்தககைய வண்ணம் தீட்டப்பட்ட கற்களை அதிர்ஷ்டம் என நம்புகிறார்கள் மக்கள்.

Bild: de

சமீபத்தில் அமெரிக்கப்பெண் ஒருவரின் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து சோர்ந்துபோன நேரத்தில், அந்த குழந்தையின் சகோதரகள் இத்தகைய வண்ணம் தீட்டப்பட கற்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவர்கள் அந்த கற்கள் தங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என நம்ப, சோகத்தில் இருந்த அந்த குடும்பத்திற்கு அந்த கற்கள் பெரும் ஆறுதலைக் கொண்டு வந்திருக்கிறது.

எனவே தானும் அதேபோல் வண்ணம் தீட்டிய கற்களைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் மறைத்து வைக்கிறார் Kartika.

அத்துடன் அவற்றை கண்டுபிடிப்பவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பேஸ்புக் பக்கம் ஒன்றிலும் பகிர்ந்துகொள்ள, தனது கஷ்டத்தின் மத்தியிலும், தான் பலருக்கு மகிழ்ழ்சியை, ’அதிர்ஷ்டத்தைக்’ கொண்டு வருவது Kartikaவுக்கும் மிகுந்த மகிழ்ழ்சியை அளிப்பதாகவும், தான் குணமாகிவிட்டதுபோல் உணர்வதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

Bild: Kartika Versteden

Bild: Kartika Versteden

Bild: Kartika Versteden

Bild: Kartika Versteden

Bild: Facebook / Doris Stüssi

Bild: del

Bild: del

Bild: Kartika Versteden

Bild: Kartika Versteden

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்