14 வயது சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய சுவிஸ் இளைஞர்: அதன் பின்னர் நடந்த துயரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 14 வயது சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் ஆபாச தளத்தில் இளைஞரால் பதிவேற்றப்பட்ட நிலையில், குறித்த சிறுமி எடுத்த முடிவு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இணையத்தில் அறிமுகமான 14 வயது சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இளைஞர் ஒருவர் ஆபாச இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த புகைப்படங்களுடன், குறித்த சிறுமியின் பெயரையும் இணைத்ததால், மனமுடைந்த சிறுமி உதவ எவரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சுவிஸ் இளைஞர், சூரிச் உயர் நீதிமன்றத்தில் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

தற்போது 31 வயதாகும் அந்த இளைஞர், தமக்கு அந்த சிறுமி தொடர்பில் வேறு எதுவும் தெரியாது எனவும், அவரை காதலிப்பதாக கூறியது பொய் எனவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் அவரது அந்தரங்க புகைப்படங்களை கைப்பற்றுவதே நோக்கம் என்பதால் அவரிடம் பொய்களை கூறியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சம்பவம் நடந்தபோது, தாம் செய்வது தவறு என தமக்கு தெரியவில்லை எனவும், தற்போது அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகவலைதளங்களில் தற்போது தாம் செயல்படுவது இல்லை எனவும் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் பலரது கவனதையும் ஈர்த்த நிலையில், இறுதியாக ஒருமுறை அந்த இளைஞரை தொடர்பு கொண்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அவரது புகைப்படம் இணையத்தில் பரவியதற்கும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து அவருக்கு 42 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த இளைஞர் தரப்பு, 12 மாதங்களாக குறைக்க வாதிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்