31 ஆண்டுகளுக்குமுன் திருட்டுப்போன purse-யை உரிமையாளரிடம் சேர்த்த சுவிஸ் பொலிசார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் 24 வயதுடையவராக இருக்கும்போது திருட்டுக்கொடுத்த purse-யை 31 ஆண்டுகளுக்குப்பின் அவரிடம் சேர்த்துள்ளனர் சுவிஸ் பொலிசார்.

Winterthur நகரில், வாகனம் நிறுத்துமிடம் ஒன்றில் பழுதுபார்க்கும் பணி செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அந்த purse-யையை கண்டுபிடித்தனர்.

அதில் பணம் எதுவும் இல்லையென்றாலும், கிரெடிட் கார்டுகளும் சில இலவச பேருந்து பயணச்சீட்டுகளும் அதில் இருப்பதைக் கண்டு அதை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் அந்த ஊழியர்கள்.

பொலிசார் அந்த purse-யின் உரிமையாளரை விரைந்து கண்டுபிடித்து, உடனடியாக அவரிடம் ஒப்படைத்தனர்.

அந்த purse-யை, 1998ஆம் ஆண்டு அந்த பெண் 24 வயதுடையவராக இருக்கும்போது, அவரிடமிருந்து திருடப்பட்டது.

இத்தனை ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த அந்த purse-யில் பணம் எதுவும் இல்லையென்றாலும், தனது கணவரின் புகைப்படம் ஒன்று அதில் இருப்பதையடுத்து, அது கிடைத்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்கிறார் அந்த பெண்.

கால இயந்திரத்தில் முன்னோக்கி பயணித்தது போல் உணர்வதாக தெரிவிக்கும் அந்த பெண்ணுக்கு தற்போது 56 வயதாகும் நிலையில், அதே நபருடனேயேதான் இன்னமும் வாழ்ந்து வருவதால் அவரது புகைப்படம் கிடைத்ததில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers