மாயமான சுவிஸ் சிறுமி வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டாரா? இறுகும் விசாரணை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மண்டலத்தில் மர்மமான முறையில் மாயமான 5 வயது சிறுமி தொடர்பில் விசாரணையை கைவிடவில்ல என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாலெய்ஸ் மண்டலத்தின் சாக்சன் பகுதியில் இருந்து சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானவர் சாரா ஓபர்சன்.

கடந்த 1985 ஆம் ஆண்டு தமது பாட்டியை சந்தித்து வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார் அப்போது 5 வயதேயான சாரா.

ஆனால் அவர் பாட்டியின் குடியிருப்புக்கு சென்று சேரவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவம் சுவிஸ் நாட்டையே உலுக்கிய நிலையில்,

ராணுவம், பொலிசார் மற்றும் தன்னார்வலர்கள் குழுக்கள் இணைந்து சிறுமி சாராவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது இருசக்கர வாகனம் மட்டும் பொலிசாரால் மீட்க முடிந்தது. எதிர்வரும் டிசம்பர் மாதம் மாயமான சாராவுக்கு 40 வயதாகிறது என கூறும் அவரது உறவினர்கள்,

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எட்டாமல் போனது மிகவும் வருந்தத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இதுநாள் வரை சாரா தொடர்பில் தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மர்ம நபர்களால் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டதாகவும், சிலர் அவரை வியன்னாவில் பார்த்துள்ளதாகவும் தகவல் பரப்பினர்.

மேலும், சாரா தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு 50,000 பிராங்குகள் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் வாலெய்ஸ் மண்டல பொலிசார் இந்த வழக்கை கைவிடுவதாக இல்லை எனவும், உறுதியான தகவல் கிடைக்கும் வரை நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்