பலூனில் வானத்தில் பறக்கும் போட்டியில் கலக்கிய சுவிஸ் வீரர்கள்! வெற்றி பெற்று சாதனை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
115Shares

உலகின் பழமையான பலூனில் பறக்கும் போட்டியில் சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

63வது Gordon Bennett Cup போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. போட்டியானது சுவிட்சர்லாந்தின் எல்லையான பிரஞ்ச் நகர் Montbeliard-ல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து அடுத்த 83 மணி நேரத்துக்கு பின்னர் சுவிஸின் Fribourg நகரை சேர்ந்த Laurent Sciboz and Nicolas Tieche ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இருவரும் 1,775 கிலோமீட்டர் (1,103 மைல்) தொலைவில் உள்ள கருங்கடலின் விளிம்பை தொட்டனர்.

இந்த பலூனில் பறக்கும் போட்டுயானது முதன் முதலில் 1906 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்