புகலிடக்கோரிக்கையாளர்களை நாட்டுக்கு வெளியிலேயே நிறுத்த சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், புகலிடக்கோரிக்கையாளர்களை இலக்காக வைத்து திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் முன்வைத்துள்ள initiative ஒன்று, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருபவர்களை, அவர்களது நாட்டிலோ அல்லது அதற்கருகில் உள்ள இடம் ஒன்றிலோ அமைக்கப்படும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

இந்த திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தும் நிதியுதவி செய்யும் என்று தெரிகிறது.

விண்ணப்பங்கள் பரிசீலித்து முடிக்கப்படும் வரைக்கும் விண்ணப்பித்தவர்கள் இந்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவ முடியும் என இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த திட்டத்தை முன் வைத்தவர்களில் முக்கியமானவர்கள், UDC/SVP நாடாளுமன்ற உறுப்பினர்களான Luzi Stamm, Lukas Reimann, Andrea Geissbühler, Barbara Keller-Inhelder மற்றும் Therese Schläpfer, இவர்களுடன் பொதுமக்கள் சிலர் என்று 20 Minutes பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்