சுவிட்சர்லாந்தில் ஆற்றில் மிதந்த சிறுவனின் சடலம்: கணவரை சந்தேகிக்கும் மனைவி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சொந்த தந்தையுடன் மாயமான 4 வயது சிறுவன் ரோன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துகல் நாட்டவரான தந்தையுடன் ஞாயிறன்று குறித்த 4 வயது சிறுவன் வாகனம் ஒன்றில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட கால அளவையும் தாண்டி, சிறுவனை அந்த நபர் தாயாரிடம் ஒப்படைக்காத நிலையில், அவர் உள்ளூர் நேரப்படி சுமார் 7 மணியளவில் ஜெனீவா மண்டல பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மண்டல பொலிசார், அந்த நபரின் வாகனத்தை தேடும் பணியில் துரிதமாக இயங்கினர்.

இந்த நிலையில் திங்களன்று இரவு வெர்போயிஸ் அணையில் இருந்து சிறுவனின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சிறுவனின் குடும்பத்தாரே உள்ளூர் பத்திரிகைகளுக்கு உறுதி செய்துள்ளனர்.

தற்போது மாயமான அந்த நபரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான தகவலின் அடிப்படையில், சிறுவனின் பெற்றோர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும்,

சம்பவத்தன்று சிறுவனை அழைத்து சென்ற தந்தையே கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் பொலிஸ் விசாரணையிலேயே உண்மை என்ன என்பது வெளிவரும். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல் வெளிவரும் என ஜெனீவா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்