சுவிட்சர்லாந்தில் பாடசாலை அருகே வாளுடன் காத்திருந்த பெண்: பீதியில் உறைந்த பெற்றோர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் பாடசாலை ஒன்றின் அருகே வாளுடன் பெண் ஒருவர் காத்திருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லூசெர்ன் நகரின் Zell நகராட்சிக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அருகாமையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

உடனடியாக குறித்த பெண்ணின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து லூசெர்ன் நகர பொலிசாரின் சமூக வலைதள பக்கத்திற்கு பொதுமக்களில் ஒருவர் அனுப்பி வைத்து விசாரிக்க கோரியுள்ளார்.

அந்த புகைப்படம் நொடி நேரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து லூசெர்ன் நகர பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், வியாழனன்று குறித்த பாடசாலை அருகே அந்த மர்ம பெண் வாளுடன் தென்பட்டது தெரியவந்தது.

மட்டுமின்றி, அவர் பாடசாலை சிறார்களை கண்காணித்து வந்ததாகவும், மெல்ல மெல்ல சிறார்களை நெருங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து துரிதமாக செயல்பட்ட பொலிசாருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. அப்பகுதியில் இருந்து அவர் மாயமாகியுள்ளார்.

குறித்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்த தந்தை ஒருவர், தமக்கு உடல் நடுங்கியதாகவும் பேச்சே எழவில்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த பாடசாலையானது இச்சம்பவத்தை மறுத்துள்ளதுடன், பெண் ஒருவர் அவ்வாறு தென்பட்டார் என்றும் ஆனால் அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்