வித்தியாசமான காரணத்திற்காக ஜெனீவாவில் தெரு விளக்குகள் அணைப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா மக்கள் நட்சத்திரங்களை ரசிப்பதற்காக தெரு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்ட சுவையான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

திரைப்பட நட்சத்திரங்களைக் காண மக்கள் திரளுவது சாதாரணமான ஒன்றுதான், ஆனால், ஜெனீவா மக்கள் வானிலுள்ள நட்சத்திரங்களை ரசிப்பதற்காக ஒன்று கூடியுள்ளார்கள்.

மக்களில் பலர், வானியல் ஆராய்ச்சியாளர்களின் விளக்கங்களை கேட்பதற்காக நகரின் மத்தியில் திரண்டார்கள்.

முற்றிலும் இருளாக இல்லையென்றாலும், சில இடங்களில் மேகம் சூழ்ந்திருந்தாலும், மக்கள் நட்சத்திரங்களை ரசிப்பதற்காக கூடினார்கள்.

ஜெனீவாவை சுற்றிலும், பிரான்ஸ் வரை நீளும் தெருக்களில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், கடைகளும் உணவகங்களும் தங்கள் விளக்குகளை எரியவிட்டதால், இப்படி ஒரு சம்பவம் நடப்பதையும், தெரு விளக்குகள் அணைக்கப்பட்டதையும் கவனிக்காமலே சிலர் இருந்ததும் குறிப்பிடத்தக்கதுதான்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்