லுசேர்ன் மாநில துர்கை அம்மன் ஆலயத்தில் கோலாகலமாக ஆரம்பமான நவராத்திரி பண்டிகை!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

நவராத்திரி பண்டிகை நேற்று முதல் நவராத்திரி பண்டிகை புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.

ஒன்பது இரவுகள் அம்பிகையை ஒன்பது நாட்கள் அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

எல்லாவற்றுக்கும் சக்தி தான் ஆதாரம். அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. அந்த வகையில் இன்று லுசேர்ன் துர்கை அம்மன் ஆலயத்தில் முதலாவது நாள் நவராத்திரி பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதேவேளை, நவராத்திரி முதல் நாள் பூஜையில் லுட்சேன் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ்மன்றத்தினால் சிறப்பிக்கப் பட்டதுடன் மாணவர்களினால் களிப்பூட்டிய நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்